• Jan 06 2025

சுதா கொங்கரா படத்தில் அமரன் கிளைமாக்ஸா? SK-25 திரைப்பட அப்டேட்..!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் சுதாகொங்கராவின் அடுத்த படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.  இந்நிலையில் SK-25 திரைப்படத்தின் ஷூட்டிங் தொடர்பான அப்டேட் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. 


நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து வழங்கிய படங்களின் வெற்றியால் இவரின் அடுத்த திரைப்படம் என்னவாக இருக்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அமரன் திரைப்படத்தின் பின்னர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் SK23 படத்தில் நடித்துவருகிறார்.  இந்நிலையில் SK 25வது படத்தின் ஷூட்டிங் தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.  


இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். ஜெயம் ரவி இந்த படத்தில் வில்லனாக நடிக்கின்றார்.மற்றும் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில் தற்போது படத்தின் முதல் ஷூட்டிங் இன்று சென்னையில் உள்ள St. George Anglo Indian பள்ளியில் தொடங்குகிறது. மேலும் இப்படத்தின் கிளைமாக்ஸ் "அமரன்" படத்தை போன்று இருக்கும் என தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement