• Jul 01 2025

அரசியலுக்கு வரணும்… ஆனா கட்சி பிறகு சொல்லுறேன்..! திடீரென வைரலாகும் அம்பிகாவின் பேட்டி...

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களின் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்த அம்பிகா, சமீபத்தில் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். வழக்கம் போல கோவிலில் பக்தி மனதுடன் தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அம்பிகா செய்தியாளர்களை சந்தித்திருந்தார். அந்த சந்திப்பில் நடிகை அளித்த சில கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


அம்பிகா அதன்போது, “திருவண்ணாமலை எனக்குப் பிடித்தமான இடம். இங்கே வந்தால் மனம் அமைதியாக இருக்கும்." என்று தெரிவித்திருந்தார். மேலும் செய்தியாளர்கள் “அரசியலுக்கு வரலாம்னு யோசனை இருக்கா?” என்ற கேள்வியையும் அம்பிகாவிடம் கேட்டிருந்தனர்.


அதற்கு அம்பிகா, “எனக்கு அரசியல் ரொம்பவே பிடிக்கும்... வரணும்... ஆனா எந்த கட்சினு பிறகு சொல்லுறன்..." என்றார். இந்த ஒரு வரியின் பின்னால் பல அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன. இந்தக் கருத்து வெளியானதிலிருந்து ரசிகர்களுக்கு அம்பிகாவின் அரசியல் வாழ்க்கை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Advertisement

Advertisement