• Dec 27 2024

மேட்ச் தோற்றதும் கண்ணீர் விட்டு அழுத காவ்யா மாறன்.. ஆறுதல் சொன்ன ‘வேட்டையன்’ நடிகர்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படுமோசமாக விளையாடி தோல்வி அடைந்த நிலையில் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கண்ணீர் வடித்த நிலையில் அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் ‘வேட்டையன்’ படத்தில் நடித்த நடிகர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி வெறும் 113 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி வெற்றி பெற்றதை அடுத்து 2024 ஆம் ஆண்டின் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் தங்களுடைய அணி வெற்றி பெறும் என கனவுடன் இருந்த காவ்யா மாறன் படு மோசமாக தோல்வி அடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும் கொல்கத்தா அணிக்கு எழுந்து நின்று கைக்கு தட்டி தனது பாராட்டுக்களை தெரிவித்த போதிலும் கண்ணீரை அடக்க முடியாமல் அவர் திரும்பி நின்று அழுதார்.



இந்த நிலையில் இந்த வீடியோவுக்கு ‘வேட்டையன்’ படத்தில் நடித்த நடிகர் அமிதாப் பச்சன் தனது சமூக வலைத்தளத்தில் ஆறுதல் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:

ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. தோல்விக்கு பிறகு ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுததை பார்த்தேன். மனம் வருத்தம் அடைந்தது.

இருப்பினும் அவர் கேமராக்களில் இருந்து முகத்தை திருப்பி தனது கண்ணீரை மறைத்தார். அவருக்காக நான் வருந்துகிறேன். ஆனால் அதே நேரத்தில் ’நாளை இருக்கிறது என்ற நம்பிக்கையை இழக்க வேண்டாம்’ என்றும் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement