‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படத்துக்குப் பிறகு, இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கியுள்ள அடுத்த முயற்சி ‘தண்டகாரண்யம்’. சமூக அரசியல் கோணங்களில் இயங்கும் இப்படத்தில், ‘அட்டக்கத்தி’ தினேஷ் மற்றும் கலையரசன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘தண்டகாரண்யம்’ என்பது ராமாயணத்தில் குறிப்பிடப்படும் புகழ்பெற்ற காட்டின் பெயர். அதேபோல், இப்படத்தின் கதைப்பட்டையும் காட்டையும், காவல் அதிகாரிகளையும், பயங்கரவாதச் சூழலையும் மையமாகக் கொண்டிருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் அதிகாரத்தின் ஒடுக்குமுறைகள் எளிய மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தை ஆழமாக சித்தரிக்கிறது.
பா.ரஞ்சித்தின் 'நீலம் ப்ரொடக்ஷன்ஸ்' மற்றும் 'லர்ன் அண்ட் டீச்' நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் ரித்விகா, வின்சு சாம், ஷபீர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தை பார்த்த இயக்குநர் சேரன், “அதிகாரம் எளிய மக்களை அடிமைகளாக்கும் முறையை ஆழமாக பதிவு செய்துள்ள சிறப்பான படைப்பு,” என்று பாராட்டியுள்ளார்.
‘தண்டகாரண்யம்’ திரைப்படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளது. சமூக விழிப்புணர்வையும், ஆழ்ந்த அரசியல் பார்வையையும் முன்வைக்கும் இந்த திரைப்படம், வரும் செப்டம்பர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Listen News!