• Dec 26 2024

மம்மி, நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.. நடிகை எமி ஜாக்சனிடம் கேள்வி கேட்ட மகன்

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

நடிகை எமி ஜாக்சனின் ஐந்து வயது மகன் தனது அம்மாவிடம் ’நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை’ என்று கேட்டதாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவான ’மதராசபட்டினம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அதன் பின்னர் அவர் ’தாண்டவம்’ ’தங்க மகன்’ ’கெத்து’ ’தெறி’ ’தேவி’ ’2.0’ ஆகிய படங்களில் நடித்த நிலையில் சமீபத்தில் வெளியான ’மிஷன் சாப்டர் ஒன்’ என்ற படத்தில் நடித்தார்.

இந்த நிலையில் நடிகை எமி ஜாக்சன் கடந்த 2019 ஆம் ஆண்டு தனது காதலர் ஜாம்பியா என்பவரை திருமணம் செய்து கொண்ட பின்னர் அதன்பின் அவரை விவாகரத்து செய்தார். இந்த நிலையில் தற்போது எட்வெஸ்ட் என்பவருடன் டேட்டிங் செய்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்யப் போவதாகவும் கூறப்படுகிறது.



எட்வெஸ்ட், எமி ஜாக்சனை காதலிக்க ஆரம்பித்தது முதல் அவருடைய மகனிடம் நெருக்கமாகிவிட்டதாகவும் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய எமி ஜாக்சன் கூறியுள்ளார். மேலும் எனது மகன் என்னிடம் ’நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறீர்கள், சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்று சொன்னதாக கூறியுள்ளார்

’நாங்கள் இருவரும் தற்போது நல்ல புரிதலுடன் பழகிவிட்டோம், என் உணர்வுகளுடன் அவர் கலந்துவிட்டார், எனது மகனும் க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டதால் இருவரும் விரைவில் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளோம்’ என்று எமி ஜாக்சன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement