• Dec 26 2024

4 கோடி கேட்ட ஹீரோயின் நீக்கம்.. வெறும் 40 லட்சத்தில் ஒப்பந்தமான ஹீரோயின்.. தயாரிப்பாளரின் சாதுர்யம்

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்க  இருக்கும் திரைப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்ற நிலையில் இந்த படத்தில் ருக்மணி வசந்த் என்பவர் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார் என்பதும் நேற்றைய பூஜையில் கூட அவர் கலந்து கொண்டார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தில் முதலில் பிரபல தெலுங்கு மற்றும் ஹிந்தி நடிகை மிருணாள் தாக்கூர்  நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்றும் அவர், ரூபாய் 4 கோடி சம்பளம் கேட்டதால் படக்குழுவினர் குறிப்பாக தயாரிப்பாளர் பின்வாங்கியதாக கூறப்பட்டது.

’எஸ்கே 23’ திரைப்படத்தில் நாயகிக்கு பெரிய அளவில் கேரக்டர் இல்லை என்றும் டூயட் மற்றும் சில ரொமான்ஸ் காட்சிகளுக்கு மட்டும் தான் நடிக்க வேண்டிய நிலையில் எதற்காக நான்கு கோடி தேவை இல்லாமல் செலவு செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் தரப்பு கூறியதாகவும், அதை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் ஏற்றுக் கொண்டதை அடுத்து ருக்மணி வசந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இவருக்கு சம்பளம் வெறும் 40 லட்ச ரூபாய் மட்டுமே பேசப்பட்டு இருப்பதாகவும் அதுமட்டுமின்றி அவர் பாலு மகேந்திரா ஹீரோயின் போல் இயல்பான அழகுடன் இருப்பதாகவும் நிச்சயம் அவர் இந்த படத்திற்கு பிறகு அதிக அளவில் தமிழ் பட வாய்ப்புகளை பெறுவார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்து வரும் 51 வது திரைப்படத்தில் நடித்து வரும் ருக்மணி வசந்த், ‘எஸ்கே 23’ படத்தில் நடிப்பதன் மூலம் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைவார் என்று கூறப்படுகிறது.



பொதுவாக மாஸ் நடிகர்களின் படங்களில் நாயகிகள் பெயருக்கு தான் ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார்கள் என்றும் குறிப்பாக பாடல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் மட்டுமே நடிக்கும் அவர்களுக்கு எதற்காக கோடி கணக்கில் செலவு செய்ய வேண்டும் என்ற தயாரிப்பாளரின் முடிவை கோலிவுட் திரையுலகினர் பாராட்டி வருகின்றனர். 

Advertisement

Advertisement