• Dec 26 2024

எமி ஜாக்சன் பையன் இவ்ளோ வளந்துட்டாரா… வெளியாகிய லேட்டஸ்ட் போட்டோஷூட்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகியான எமி ஜாக்சன், கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குநர் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் எமி ஜாக்சன். அப்படத்தில் வெளிநாட்டுப் பெண்ணாகவே நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.  


அதன்பின்னர் தனுஷுக்கு ஜோடியாக தங்கமகன், விஜய்யுடன் தெறி போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வர தொடங்கினார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில் மீண்டும் இங்கிலாந்துக்கே எமி சென்றுவிட்டார். 


திரைப்படங்களில் ஆக்ட்டிவாக இருந்த எமி, ஜார்ஜ் என்பவருடன் காதல் வயப்பட்ட பின்னர் அவருடன் டேட்டிங் செய்து வந்தார். இந்த ஜோடிக்கு திருமணம் ஆகும் முன்பே ஆண் குழந்தையும் பிறந்தது.


 இதையடுத்து திருமணம் நிச்சயம் ஆன நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்துவிட்டனர்.தற்போது மீண்டும் எட் வெஸ்ட்விக் என்ற பிரிட்டிஷ் நடிகருடன் டேட்டிங் செய்து வருகிறார்.


இந்த நிலையில் தன்னுடைய மனுடன் ஜாலியாக ஊர் சுற்றும் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவை ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement