• Sep 05 2025

"டான்" பட இயக்குநர் காலமானார்..! வெளியான அதிர்ச்சித் தகவல்கள் இதோ.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவராக விளங்கிய சந்திரா பாரோட் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற தகவல் திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 


இயக்குநர் சந்திரா பாரோட், பில்லா படத்தின் ஒரிஜினலான அமிதாப் பச்சன் நடித்த டான் படத்தை இயக்கி இந்திய சினிமாவில் தனித்துவமான முத்திரையை பதித்தவர். இந்த படத்தில் அமிதாப் பச்சன் நடித்திருந்தார்.

'டான்' (Don) திரைப்படம், பாலிவுட் திரைத்துறையில் திரைக்கதை, திரைப்பாடல்கள், மற்றும் நடிப்புத் திறமை என்பவற்றின் ஒரு உயர்ந்த தளமாக கருதப்பட்டது. அமிதாப் பச்சன் தனது நடிப்பின் உச்சக்கட்டத்தை வெளிப்படுத்திய இப்படத்தை இயக்கியவர் சந்திரா பாரோட் தான்.


சந்திரா பாரோட்டின் மறைவைத் தொடர்ந்து, பாலிவுட் திரைத்துறையின் பல முக்கிய பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது மரியாதையைத் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement