• Jul 22 2025

விபத்தில் உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர்..!மோகன்ராஜ் குடும்பத்திற்கு பா.ரஞ்சிதின் நிதி உதவி..!

Roshika / 5 hours ago

Advertisement

Listen News!

திரைப்பட உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு, அவரது குடும்பத்தினருக்குப் பெரும் இழப்பாக அமைந்தது. கடந்த வாரம் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' திரைப்படத்தின் ஷூட்டிங்கின்போது நிகழ்ந்த திடீர் விபத்தில் அவர் துடிதுடித்தே உயிரிழந்தார்.


இந்நிலையில், அவரின் குடும்பத்தின் துயரத்தை குறைக்கவும், நிதி சுமையை தாங்கவும், இயக்குநர் பா. ரஞ்சித் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.20 லட்சம் அளித்து உதவி செய்துள்ளார். இது தமிழ் திரையுலகில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது. மோகன்ராஜ் தனது வாழ்க்கையில் பல முக்கிய திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி, நடிகர்கள் மற்றும் இயக்குநர்களிடையே நம்பிக்கையையும் மதிப்பையும் பெற்றிருந்தவர்.


 அவரது திடீர் மரணம், திரைப்பட தொழிலாளர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகத்தில் நடைபெறும் படப்பிடிப்பு பாதுகாப்பு மற்றும் தொழிலாளர்களின் நலன்கள் குறித்து இந்த சம்பவம் புதிய கவனத்தை ஈர்த்துள்ளது. இது போன்ற விபத்துகள் இனி நடக்காமல் இருக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement

Advertisement