செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி, பின்னர் சினிமா மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு பிரபலமானவர் தான் அனிதா சம்பத். குறிப்பாக, பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூலம் அவர் அதிகளவான ரசிகர்களிடம் அறிமுகமானார். தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவர், தனது வாழ்க்கை முன்னேற்றங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அனிதா சம்பத் வெளியிட்டுள்ள புதிய பதிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில், அவர் பி.ஆப்டம் (Bachelor of Optometry) படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் அதிகாரபூர்வமாக கண் மருத்துவராக (Optometrist) தன்னை உருவாக்கிக் கொண்டதில் பெருமை கொள்வதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தனது கல்விப் பயணத்தில் துணைநின்ற ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துள்ளார்.
சினிமா, டிவி மற்றும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருந்தபோதிலும், கல்வியை தொடர்ந்து முடித்திருப்பது பலருக்கும் ஒரு நல்ல முன்மாதிரியாக பார்க்கப்படுகிறது.
அனிதா சம்பத்தின் இந்த சாதனைக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர். தற்போது அவரது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Listen News!