பாலிவுட் முதல் கோலிவுட் வரை பிரபலமாகி வரும் நடிகை மிருணாள் தாக்கூர் குறித்து சமீபத்தில் பரபரப்பான தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அவர் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சை உருவானது, டக்காயிட் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தான். ஷானில் தியோ இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அடிவி சேஷ், பிரகாஷ் ராஜ், காமாட்சி பாஸ்கர்லா, அனுராக் காஷ்யப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

படத்தின் புரமோஷனுக்காக மிருணாள் தாக்கூர் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டார். அவர் போலீஸ் வாகனத்தில் கையில் விலங்குடன் (handcuffs) கொண்டு வரப்பட்டார். இதேபோல், அடிவி சேஷ் மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோரும் அவருடன் இருந்தனர். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பரவியதும், அவர் உண்மையில் கைது செய்யப்பட்டாரா என்ற குழப்பம் ரசிகர்களிடையே ஏற்பட்டது.
ஆனால் பின்னர் இது ஒரு புரமோஷன் ஸ்டண்ட் மட்டுமே என்பது தெளிவானது. படத்திற்கான கவனத்தை ஈர்க்கும் விதமாக இப்படியான நிகழ்வு திட்டமிட்டு நடத்தப்பட்டது.
இருப்பினும், இந்த சம்பவம் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. தற்போது உண்மை வெளிவந்ததையடுத்து, இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
Listen News!