• Dec 25 2024

ரஜினி படத்திற்கு முன்பே லோகேஷின் இன்னொரு படம்.. மாஸ் நடிகர் தான் ஹீரோ..! இதுவும் LCU தானா?

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

புதிய புதிய எண்ணங்களுடன் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் கலைஞர்களில் கமலுக்கு அடுத்து பெயர் பெற்றவர் இயக்குனர்  லோகேஷ் கனக ராஜ் ஆவார். மாஸ் ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர்களை வைத்திருக்கும் இவரின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.


மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ் ஆவார். தொடர்ந்து விஜய் , கார்த்தி , கமல் என பல முன்னணி நடிகர்களை வைத்து பல ஹிட் படங்களை எடுத்த இவர் சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்திருந்தார். குறித்த நிறுவனத்தினால் தயாராகும் அடுத்த திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது.


புதிய முயற்சிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதற்காக ஜி ஸ்குவார்ட் என்ற பெயரில் லோகேசால் ஆரம்பிக்கப்பட்ட தயாரிப்பு நிறுவனதினால் தயாரிக்கப்படும் அடுத்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். குறித்த படத்தை ரெமோ திரைப்படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கவும் உள்ளார். பென்ஸ் என பெயர் வைக்க பட்டுள்ள திரைப்படத்தின் போஸ்டரை தனது எக்ஸ் தல பக்கத்தில் பதிவிட்டுள்ளார் லோகேஷ் கனக ராஜ்


Advertisement

Advertisement