மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பெற்ற நடிகை ஐஷ்வர்யா லட்சுமி, தனது நடிப்புத் திறமையை காட்டி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். 2025ஆம் ஆண்டு மட்டும் பார்த்தாலும், தக் லைஃப் மற்றும் மாமன் ஆகிய திரைப்படங்களில் அவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தற்போது, கட்டா குஸ்தி 2, கேங்ஸ்டர் ஆஃப் முண்டன்மலா, மற்றும் பிஸ்மி ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் மிகவும் தீவிரமாக செயற்பட்டு வந்த ஐஷ்வர்யா, திடீரென ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட செய்தியில், அவர் சமூக ஊடகங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியது. “இந்த துறையில் பலருடன் பழகுவதற்கும் கற்றுக் கொள்ளவும் தான் சமூக ஊடகத்தைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் அது என்னை கட்டுப்படுத்த ஆரம்பித்தது. என் உள்ளே இருக்கும் குழந்தைத்தன்மையை அது அழிக்க தொடங்கியது. சிறிய சந்தோஷங்களைக் கூட அனுபவிக்க முடியவில்லை. சுய சிந்தனை என்றும் சிதைந்தது.”
இந்த முடிவால், ஐஷ்வர்யா தன்னுடைய தனிப்பட்ட வளர்ச்சிக்காக ஒரு இடைவெளியை தேடி வருகிறார் என்பது தெளிவாகிறது. அவருடைய ரசிகர்கள், இந்த முடிவை மதித்து, அவருக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள்.
Listen News!