• Dec 25 2024

அர்னவ் நல்லவன் கிடையாது.. என்னைய பலிகாடா ஆகிட்டான்! புட்டு புட்டு வைத்த அனுராதா

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளராக கலந்து கொண்டு நேற்றைய தினம் எலிமினேட் ஆகி சென்ற அர்னவ் பற்றிய சர்ச்சை கருத்துக்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இவர் ஏற்கனவே தனது மனைவியை பிரிந்து அன்சிதா என்பவரை காதலித்தார். இவர்கள் இருவரும் இணைந்து பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதை தொடர்ந்து அர்னவ்வின் முன்னாள் மனைவி திவ்யா சமீபத்தில்அர்னவ், அன்ஷிதா பேசிய ஆடியோவை வெளியிட்டு இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் படு வைரலானது. அர்னவ் வெளியேற இதுவும் ஒரு காரணமாக காணப்பட்டது.

இந்த நிலையில், செல்லம்மா சீரியலில் அர்னவுடன் நடித்த நடிகை அனுராதா அர்னவை பற்றி சில விஷயங்களை தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ வேகமாக வைரலாகி வருகின்றது.

அதன்படி அவர் கூறுகையில், அர்னவ் நல்லவர் எல்லாம் கிடையாது. அவர் ஆரம்பத்தில் நன்றாக பேசுவார். ஆனால் அவருடைய நிஜ கேரக்டர் மிகவும் மோசம். அன்சிதாவும் அர்னவ்வும் பிக் பாஸ் சென்றது எதார்த்தம் என்று நினைத்து நடித்துக் கொண்டுள்ளார்கள். ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை. அவர்கள் சூட்டிங் ஸ்பாட்டில் எப்படி எல்லாம் நடந்து கொள்வார்கள் என்று நாங்களே கண்ணால் பார்த்துள்ளோம்.


அவர் திவ்யா ஸ்ரீதரை காதலித்து திருமணம் செய்யும்போது அதற்கு எங்களையும் கூப்பிட்டு இருந்தார். நானும் இன்னும் இரண்டு நடிகைகளும் சென்றிருந்தோம். அர்னவ் கல்யாணம் செய்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு. ஐந்து வருடம் லிவிங் கில் வாழ்ந்து தான் அர்னவை திருமணம் செய்தார். அப்போதே திவ்யாவுக்கு இவர் சில பெண்களோடு தொடர்பு இருப்பது தெரிந்து தான் திருமணத்தை விரைவில் வைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அந்த திருமணத்திற்கு சென்ற போது தான் திவ்யாவை முதலில் சந்தித்தோம்.

திருமணத்திற்கு பிறகு அன்ஷிதாவோடு அர்னவ் பழகுவதை நாங்கள் திவ்யாவிடம் சொன்னோம் என்று கூறி அர்னவ் என்னிடம் கோபப்பட்டார். மேலும் உங்களால் தான் வீட்டில் பிரச்சனை என்றார். என்னிடம் அவர் அப்படி சொன்னது எனக்கு கோபமாக இருந்தது. காரணம் நான் திவ்யாவிடம் எதுவும் சொல்லவே இல்லை.

செல்லமா சீரியலில் நடித்துக் கொண்டிருந்த ஒருவர்தான் திவ்யாவிடம் சொல்லிக் கொடுத்தது. ஆனால் உண்மை தெரியாமல் அவர் என்னிடம் கோபப்பட்டார். நான் திட்டி விட்டேன். அவருடைய கல்யாணத்தில் கலந்து கொண்டது தான் தப்பு என்று நினைக்கின்றேன். அதனால் அவர் என்னை பலிகாடா ஆகிவிட்டார். 

அதேபோல திவ்யாவும் அவசரமாக கல்யாணம் செய்திருக்கக் கூடாது. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்து இருந்தால் அவருடைய உண்மையான முகம் வெளியே வந்திருக்கும் என்று அனுராதா  பேசியுள்ளார்.

Advertisement

Advertisement