விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கூமாப்பட்டி கிராமம் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி பிரபலமடைந்துள்ளது. "கூமாப்பட்டி ஒரு தனித் தீவு", "மூலிகை தண்ணீர் ஊரு", "மனஅழுத்தமா? கூமாப்பட்டிக்கு வாங்க" போன்ற உணர்வுபூர்வமான ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் இந்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் அந்த ஊரை காண விரும்பத் தொடங்கினர்.
இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தங்கபாண்டியன். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிராமத்தின் இயற்கை அழகை விளக்கும் வீடியோக்கள் மூலம் இணையத்தை ஆக்கிரமித்த இவர், ஜீ தமிழ் உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புகழ் பெற்றார். தற்போது ஒரு பிரபல இன்ஃப்ளூயன்சராகவும் வலம் வருகிறார்.
இந்த நிலையில், அண்மையில் தங்கபாண்டியன் ஒரு தனியார் பேருந்தில் பயணம் செய்தபோது, ஓட்டுநரின் அஜாக்கிரதையால் கதவு திடீரென அடைக்கப்பட்டது. இதில் தங்கபாண்டியனுக்கு கை முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்துக்குப் பிறகு அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதேவேளை, கூமாப்பட்டி அருகே உள்ள பிளவக்கல் அணை பகுதி கடந்த 5 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு அனுமதியற்ற பகுதியாக இருப்பதால், சுற்றுலா பயணிகள் அங்கே செல்ல வேண்டாம் என பொதுப்பணித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக, பலர் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.
Listen News!