• Sep 16 2025

கணவர் மறைவுக்குப் பிறகு பரவும் வதந்திகள்...!உண்மையை வெளிப்படுத்தும் உருக்கமான பதில்..!

Roshika / 1 hour ago

Advertisement

Listen News!

கே. நட்ராஜ் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான்  நடிகை மீனா.


90 களில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் முன்னணி நாயகியாக வலம் வந்தார். “என் ராசாவின் மனசிலே” படம் மூலம் அறிமுகமான அவர், எஜமான், முத்து, நாட்டாமை, சேதுபதி ஐபிஎஸ், அவ்வை சண்முகி, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட படங்களில் சிறப்பாக நடித்துள்ளார்.

மீனா பெங்களூரைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். சில வருடங்களுக்கு முன்பு வித்யாசாகர் நுரையீரல் தொற்றால் உயிரிழந்தார்.


சமீபத்தில் மீனா, தனது இரண்டாம் திருமணத்தைப் பற்றிய பொய்யான செய்திகள் இணையத்தில் பரவி வருவதை பற்றி பேசினார். அவர் கூறியதாவது:

“மற்ற நடிகர்களுடன், குறிப்பாக எனது கணவரின் மறைவுக்குப் பிறகு, என்னை பற்றி பரவும் செய்திகள் என்னையும் எனது குடும்பத்தினரையும் ஆழமாக பாதித்தது. எனது இரண்டாவது திருமணம் குறித்து பொய்யான செய்திகள் பரவுவது கடினமாக உள்ளது.”

இந்த கருத்தை வெளிப்படுத்தியதன் மூலம் மீனா, தனக்கு மற்றும் குடும்பத்தினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வதந்திகளை நிராகரித்துள்ளார்.

Advertisement

Advertisement