• Dec 28 2024

கருடன் படத்தில் மாபெரும் வெற்றி கண்ட நடிகர் சூரி.. ஐந்து நாட்களில் இத்தனை கோடிகளா?

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்த சூரி, தற்போது  கதாநாயகனாக ஜொலித்து வருகின்றார். இவர் விடுதலை படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் ஹீரோவாக இடம் பிடித்துள்ளார். தற்போது கருடன் படம் இவருக்கு மாபெரும் வெற்றியை ஈட்டி கொடுத்துள்ளது.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சூரியுடன்  இணைந்து உன்னி முகுந்தன், சசிகுமார், ஸ்வேதா, ரோஷினி, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.


இந்த நிலையில், கருடன் படத்தின் ஐந்தாவது நாளுக்கான பாக்ஸ் ஆபீஸ் வசூல் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த ஐந்து நாட்களில் சூரி நடித்த கருடன் படம் 26 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம்.

இந்த வார இறுதியில் கண்டிப்பாக கருடன் படத்திற்கு இன்னும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement