• Dec 26 2024

பாக்கியாவுக்கு எதிராகத் திரும்பிய ஈஸ்வரி- கோபிக்கு செழியன் கொடுத்த பதிலடி- திடீரென வந்து நின்ற ராதிகா

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கோபி கெட்ட வார்த்தையால் திட்டியதை பாக்கியா சொன்னதால் எழில் கோபியை அடிக்கப் பாய்கின்றார். அப்போது எல்லோரும் கோபியையும் எழிலையும் பிரித்து விட, பாக்கியா நான் பேசிக்கிறேன் என்று ஈஸ்வரியிடம் பேசுகின்றார். இந்த வீட்டில என்னைக் கேள்வி கேட்கிற உரிமை எல்லாருக்கும் இருக்கு, இவர் யார் என்னைக் கேள்வி கேட்க என்கின்றார்.


அதான் என்னை வேணாம் என்று விட்டிட்டு போய்ட்டாரே,என்னைப் பற்றி தப்பா சொல்லுற ஒரு ஆளு இவர் மட்டும் தான் என்று சொல்ல, கோபியும் பழனிச்சாமி முன்னாள் தன்னை பாக்கியா அவமானப்படுத்தியதாகவும் அதற்கு பழனிச்சாமி சிரிச்சிட்டு நின்றதாகவும் சொல்கின்றார்.

தொடர்ந்து பேசிய ஈஸ்வரி, பழனிச்சாமியினால் தான் இவ்வளவு பிரச்சினையும், நீ எல்லாத்திலையும் ஈடுபட்டு அவமானப்பட்டு நிற்கிறதுக்கும் அவன் மட்டுமே காரணம் என பாக்கியாவைக் கண்டபாட்டுக்குத் திட்ட எழில் மீண்டும் கோபியை அடிக்கப் போக அந்த நேரம் அங்கு செழியன் வந்து விடுகின்றார்.


செழியன் அப்பா பேசின எதுவுமே உண்மை கிடையாது நான் வீட்டில தான் இருந்தேன். அம்மா சொன்னது தான் உண்மை இவர் தப்பா பேசினதுக்கு தான் வீட்டை விட்டு போகச் சொன்னாங்க. அம்மாவைப் பார்த்து என்ன வார்த்தை சொன்னாரு தெரியுமா என்று சொல்ல, எழில் அம்மா நீ இவரை வீட்டை விட்டு வெளில போ என்று சொல்லி இருக்கக் கூடாது,


கழுத்தைப் பிடிச்சு வெளியில் தள்ளியிருக்க வேண்டும் என்கின்றார்.அந்த நேரம் பார்த்து ராதிகா இனியாவுடன் வந்து நிற்கின்றார்.அப்போது கோபி வா ராதிகா, வா நீ வந்து நியாயத்தைக் கேளு என்று சொல்ல ராதிகா குழப்பத்தில் நிற்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement