• Dec 24 2024

பப்லுவின் முன்னாள் காதலிக்கு ரகசியமாக நடந்த திருமணம்! மாப்பிள்ளை யாரு தெரியுமா?

Aathira / 3 days ago

Advertisement

Listen News!

சினிமாத் திரையுலகில் நடிகர் பப்லு ஆரம்பத்தில் சீரியல் நடிகராக இருந்து தற்போது வில்லன் கேரக்டரில் மிரட்டி வருகின்றார். சமீபத்தில் வெளியான அனிமல் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இந்த படம் கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் வரை வசூலித்து இருந்தது.

57 வயதான பப்லு தனது முதல் மனைவியை பிரிந்த நிலையில், இரண்டாவதாக சீத்தல் என்ற 21 வயது பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து  பல சேனல்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார்கள். அதிலும் பேட்டியில் இருக்கும் போதே சீத்தலுக்கு உதட்டோடு உதட்டு முத்தமும் கொடுத்திருந்தார் பப்

இந்த விடயம் சமூக வலைதள பக்கங்களில் பேசு பொருளானது. மகன் வயதுள்ள பெண்ணை பப்லு காதலிப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. ஆனாலும் இவர்கள் இருவரும் எந்தவித நெகட்டிவ் கமெண்ட்ஸ்களுக்கும் பதில் அளிக்காமல் தங்களுடைய வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள்.

d_i_a

ஒரு கட்டத்தில் பப்லுவை சீத்தல் பிரிந்தார். அதற்கு காரணம் என்னவென்று எந்த ஒரு தகவலும் கூறவில்லை, பப்லுவும் அதைப் பற்றி வாய் திறக்கவில்லை. ஆனால் சீத்தல் இறுதியாக வழங்கிய பேட்டி ஒன்றில் தான் பப்லு வழங்கிய கிப்ட்ஸ், மோதிரம் என்பவற்றை அவரிடமே திருப்பிக் கொடுத்ததாக தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில், ஒரு ஆணின் கையைப் பிடித்தவாறு புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு நீண்ட பதிவையும் பதிவிட்டுள்ளார் சீத்தல்.

அதில் அவர் குறிப்பிடுகையில், எங்களுடைய பிரார்த்தனைகளுக்கு எப்போதும் பதில் அளிக்கப்படும்.. ஆமென்.. கடவுள் உங்களுக்காக பெரிய திட்டங்களை வைத்துள்ளார்..


கடவுள் நமக்கு சிறந்ததை தருகின்றார். நம்மை அவருடைய குழந்தைகளாகவே பாதுகாக்கின்றார். மேலும் தான் எப்போதும் கடவுளை நம்பி இருக்கின்றேன். ஆனால் இப்போது அவருடைய மந்திரத்தை உண்மையாகவே உணர்கின்றேன்.. அனுபவிக்கின்றேன்..

கடவுளின் ஆசிர்வாதங்கள் எங்கள் இருவர் மீதும் நம் வாழ்வில் முழுவதும் பொழியும்.. இந்த நாளில் இருந்து நல்லதா, கெட்டதோ, பணக்காரரோ, ஏழையோ, ஆரோக்கியம் என இறுதியாக  மரணம் நம்மை பிரிக்கும் வரை அன்பு செலுத்தவும் போற்றவும் விரும்புகின்றேன்.. இது என்னுடைய வாழ்வில் தெய்வீகமான அமானுஷ்யமான மறக்க முடியாத தருணம் என குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு தற்போது சீத்தல் திருமணம் செய்தவர் சுமேஷ் என்றும் அவர் தடகள வீரராகவும், ஜிம் பயிற்சியாளராகவும் காணப்படுகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement