• Dec 26 2024

ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன பாக்கியலட்சுமி சீரியல் குழுவினர்- அடடே இது தான் விஷேசமா?- குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.கணவரைப் பிரிந்து வாழும் குடும்பப் பெண் தனனுடைய குடும்பத்திற்காக எப்படியெல்லாம் கஷ்டப்படுகின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

இதனால் இல்லத்தரிசிகளின் விருப்பத்திற்குரிய சீரியலாக இது காணப்படுகின்றது. தற்பொழுது சீரியலின் கதைப்படி, கோபி Credit Card பணம் கட்டாத விஷயம் ராதிகாவிற்கு தெரிய வருகிறது.அதேபோல் பாக்கியா தனது அரசு கான்டிராக் வேலையை சிறப்பாக செய்தும் முடிக்கிறார். 


விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடர் ஒளிபரப்பாகி தற்போது 1000 எபிசோடை எட்டிவிட்டதாம். 2020ம் ஆண்டு ஜுலை மாதம் 27ம் தேதி இந்த தொடர் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. 

தற்போது டிசம்பர் 2023ல் பாக்கியலட்சுமி தொடர் 1000 எபிசோடை எட்ட மக்கள் தொடர் குழுவினருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். மேலும் அடுத்து சீரியலில் என்ன டுவிஸ்ட் நடக்கப்போகின்றது என்ற கடும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement