பிக் போஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் முகின் ராவ் .இவர் நடிகராக வேலன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார் .இவர் தற்போது "ஜின் " படத்தில் நடித்து வருகின்றார் . இப்படத்திற்கான டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து முகின் ராவ் தனது சமூகவலைத்தளபக்கத்தில் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது .
இவர் தற்போது டி.ஆர்.பாலா தயாரித்து இயக்கும் "ஜின் "படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் .இத் திரைப்படம் மே 30 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப்படத்தில் பவ்யா திரிகா ஹீரோயினாகவும் மற்றும் பால சரவணன், இமான் அண்ணாச்சி, விஜய் ஜார்ஜ், வடிவுக்கரசி, வினோதினி, நந்து ஆனந்த், ரித்விக் என பலர் நடித்துள்ளனர் .மேலும் இத் திரைபடத்திற்கு கணேஷ் சந்திரசேகரன் இசையமைத்துள்ளதுடன் அர்ஜுன்ராஜா ஒளிப்பதிவும் செய்துள்ளார் .
இவர் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் " 4 வருடங்களிற்கு பின் என்னுடைய திரைப்படம் திரைக்கு வருகின்றது. ரொம்ப உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது. இந்த படம் காமெடியாகவும் சென்டிமென்டாகவும் நல்ல வந்திருக்கு சின்ன குழந்தையிலிருந்து பெரியவர்கள் மட்டும் இந்த படம் பிடிக்கும் எனவும் இதுவரையும் கொடுத்த அன்புக்கு ஆதரவுக்கும் நன்றி இன்னும் அன்பும் ஆதரவும் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த படத்தை உங்களிடமே கொடுக்கின்றேன்." என்று கூறியிருந்தார். இவ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருவதுடன் ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் .
Listen News!