• Dec 26 2024

Bigg Boss விட்டு Kamal விலகி போகனும், கமல்ஹாசனை தாறுமாறாகக் கிழிக்கும் பிக்பாஸ் பிரபலத்தின் மனைவி

stella / 1 year ago

Advertisement

Listen News!


தற்போது நடந்து வரும் பிக் பாஸ் 7ம் சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்த பிரதீப் ஆண்டனிரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

அவரால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பல போட்டியாளர்கள் புகார் சொன்ன நிலையில், கமல் வாக்கெடுப்பு நடந்தி ரெட் கார்டு கொடுத்து பிரதீப்பை வெளியேற்றிவிட்டார். அவரை மேடைக்கு அழைத்து கூட பேசவில்லை கமல். இது தான் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.


இந்த நிலையில் இது குறித்து பிக்பாஸ் பிரபலமான யுகேந்திரனின் மனைவி பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் கமல்சேர் இப்பிடிப் பண்ணினது தப்பு. மாயா குரூப் பக்கம் அவர் சாஞ்சிட்டாரு, இந்த செயல் மூலமாக அவரே தன்னுடைய மதிப்பை இழந்திட்டாரு என்று தான் சொல்ல முடியும்.

பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது பொதுமக்கள் பார்க்கும் நிகழ்ச்சி இதற்கு கமல்ஹாசன் தேவையில்லை இதனால் கமல்ஹாசன் அந்த ஷோவை விட்டு விலகுவது தான் நல்லம்.பிரதீப் வெளியேறியதற்கு சொல்லப்பட்ட காரணம் தான ஏற்றுக் கொள்ள முடியல, அவருக்கு ஒரு வாய்ப்பினை கமல்ஹாசன் கொடுத்திருக்கலாம்.


அது எதுவுமே கொடுக்கல இந்த விஷயம் கமல்ஹாசனிடம் இருந்து எதிர்பார்க்கல,இது ஒரு மைன்ட் கேம், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்தையே முன்வைத்திருக்கிறாங்க, இது ரொம்ப தவறான விஷயம் என்றும் சொல்லியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement