• Dec 25 2024

''பிக் பாஸ்'' என் மரணப் படுக்கையிலும் மறக்காது! தனது ரசிகர்களுக்கு எமோஷனலாக கோரிக்கை விடுத்த மாயா

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 7.

பிக் பாஸ் சீசன் 7 ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் பங்கு பற்றியதுடன்  இரண்டு வீடுகள், ஐந்து வைல்ட் கார்ட் என்ட்ரி என்று முற்றிலும் வித்தியாசமாக முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 106 நாட்களைக் கடந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்தது.


பிக் பாஸ் சீசன் 7 இன் வின்னராக அர்ச்சனா அறிவிக்கப்பட்டார். அவருக்கு அடுத்ததாக மணிசந்திரா, மாயா, தினேஷ், ஆகியோர் அடுத்தடுத்த ரன்னர்  இடங்களை பெற்றனர்.

பிக் பாஸ் சீசன் 7ல் மக்களை மகிழ்விப்பதற்காக பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த மாயா, பல்வேறு  என்டர்டைன்மெண்ட் செய்து வந்தார். ஆனாலும் அவருக்கு பிக் பாஸ் டைட்டில் கிடைக்கவில்லை.


இந்த நிலையில், பிக் பாஸ் மாயா தனது ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,

என்னை மட்டும் ரசியுங்கள். என்னை போல மற்றவர்களையும் ரசியுங்கள். ஆனால் யாரையும் வெறுக்காதீர்கள். என்னை வெறுப்பவர்களாக இருந்தால் கூட அவர்களை வெறுக்காதீர்கள். பிக் பாஸ் வீட்டில் இருந்த 105 நாட்கள் மரணப் படுக்கையிலும் மறக்காதது. உங்களுக்காக உழைப்பேன். சந்திக்கலாம். எனக் கூறியதோடு தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும்  நன்றி தெரிவித்துள்ளார் மாயா.


Advertisement

Advertisement