• Apr 26 2026

வேற லெவலில் குத்தும் ஷிவானி நாராயணன்.. அடுத்த படம் கிடைச்சிருச்சா? வைரல் வீடியோ..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் அந்த சீசனில் நன்றாக விளையாடினார் என்பதும் அவர் 98 நாட்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அவருக்கு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வரை சம்பளமாக கிடைத்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் 4 மில்லியன் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் ஷிவானி நாராயணன் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் நிலையில் அவை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ’விக்ரம்’ உள்பட ஒரு சில திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தாலும் சொல்லிக் கொள்ளும் வகையான நல்ல கேரக்டர் இன்னும் கிடைக்கவில்லை என்ற நிலையில் தற்போது அவருக்கு ஒரு படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் அவர் ஒரு பாக்சிங் கேரக்டரில் நடிப்பதால் அவர் பாக்ஸிங் பழக வேண்டும் என்று இயக்குநர் அறிவுறுத்தியதாகவும் அதை மனதில் வைத்து தற்போது அவர் பாக்ஸிங் பயின்று வருவதாகவும் கூறப்படுகிறது. பாக்ஸிங் ட்ரெயினருடன் அவர் பாக்ஸிங் செய்த காட்சிகள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஒரு கேரக்டரில் நடிப்பதற்காக நிஜமாகவே பாக்ஸிங் பழகிவரும் ஷிவானிக்கு ஒரு பக்கம் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் இந்த படமாவது அவருக்கு வெற்றி படமாக உருவாகி திரை உலகில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



Advertisement

Advertisement