• Dec 27 2024

சுக்குநூறாக பிளவுபட்ட விஜயா குடும்பத்தில் பார்வதி சொன்னது நடக்குமா? முத்து - மீனா எடுத்த முடிவு

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில், விஜயா ஸ்ருதிக்கு போன் செய்து, முத்து செய்தது தப்பு தான் நான் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன். நீ வீட்ட வா மா என்று சொல்ல, முத்து இருக்கிற வீட்டுக்கு நான் வர மாட்டேன் என்று சொல்லி போனை வைக்கிறார்.

இதை தொடர்ந்து பார்வதியிடம், நான் இவ்வளவு இறங்கி பேசுறன் ஆனா ஸ்ருதி இறங்கி வரவே இல்லை, பணக்கார பிள்ளைகள் என்றா இப்படி தானா என புலம்ப, இப்போ ரவி மாமியார் வீட்டுக்கு போய்ட்டான், அண்ணாமலையும் அண்டைக்கு வெளியே போக கிளம்பிட்டார் இப்படியே போனா நீயும் என்ன போல தனியா ஆகிடுவா. பிறகு நானும் நீயும் தான் தனியா இருக்கனும் என சொல்லுகிறார்.


மறுபக்கம், வீட்டில் ரவிக்கு போஸ்ட் வர, அண்ணாமலை ரவி, ரவி என கூப்பிடுகிறார். அதற்கு பிறகு ரவி இல்லை. இன்னும் வர இல்லை என சொல்ல ரொம்பவும் கவலைப்படுகிறார். விஜயாவும் கவலைப்படுகிறார். இதை பார்த்து மீனா, முத்து கவலைப்படுகிறார்கள். மறுநாள் எதாவது பண்ணனும் என பேசிக் கொள்கிறார்கள்.

இதை தொடர்ந்து, ஸ்ருதி வேலைக்கு கிளம்ப, அவரது பெற்றோர் ஏன் வேலைக்கு போறா? வேற நல்ல வேலை வாங்கி தாரேன் என சொல்ல, எனக்கு பிடிச்ச வேலைய நான் பாக்கிறேன் என சொல்லி ஸ்ருதி கிளம்ப, இவ வெளிய போனா ரவி வீட்டுக்கு திரும்பவும் போய்டுவாளோ என சுதா பயப்படுகிறார்.

இதையடுத்து, ஸ்ருதி ஸ்டுடியோவில் டப்பிங் பேசிக் கொண்டு இருக்க, அங்கு அவருடன் கதைக்க மீனா செல்கிறார். அதேபோல் ரவியுடன் கதைக்க முத்து ஹோட்டலுக்கு செல்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement