• Feb 25 2025

ட்ராகன் படத்திற்கு வெற்றி உறுதி..! புகழ்ந்து தள்ளிய ப்ளூ சட்டை மாறன்..

Mathumitha / 2 days ago

Advertisement

Listen News!

பல படங்கள் அரசியல் செய்திகள் என பலவற்றிற்கு பலவிதமான விமர்சனங்களினை வழங்கி வருபவர் தான் ப்ளூ சட்டை மாறன் சமீபகாலமாக வெளியாகி வரும் ஒரு படத்திற்கேனும் சின்னதாக ஒரு negative விமர்சனத்தினை தனது பக்கத்தில் பதிவிடாமல் விட்டதில்லை உள்ளதை உள்ளபடி கூறும் இவர் தற்போது வெளியாகியுள்ள படம் குறித்து விமர்சனம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.


அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் நேற்றையதினம் வெளியாகிய ட்ராகன் படம் தொடர்பில் சிறந்த விமர்சனத்தினை வெளியிட்டுள்ளது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் இந்த படம் "லவ் டுடே" படத்தினை விட மிகவும் அதிகமாக வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


குறித்த விமர்சனத்தில் ப்ளூ சட்டை மாறன் "இந்த படத்தின் ட்ரைலர் வந்த போது பலரும் இதை டான் படம் என்று சொன்னார்கள். ஆனால், இது முற்றிலும் வேறு ஒரு கதை. முதல் பாதி எங்கேயோ பார்த்த படம் மாதிரி இருந்தாலும் இடைவெளியில் ஒரு ட்விஸ்ட் வைத்தார்கள். இரண்டாம் பாதியில் வேறு மாதிரியான ஸ்க்ரீன் பிளே பண்ணி இருந்தது நல்லா இருந்தது. பொதுவா ஹீரோ ஜெயிச்சா போதும்னு படம் எடுப்பாங்க. ஆனா, எப்பவும் நேர் வழி தான் சிறந்தது என்று சொல்லாமல் சொன்னது தான் இந்த படத்தின் மிகெர்பெரிய ட்ராகன் படம் குறித்து" என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement