• Dec 25 2024

Breaking News:- பிரபல இயக்குநர் ஷங்கர் காலமானார்!

subiththira / 5 days ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் கார்த்தி நடித்த சகுனி திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஷங்கர் தயாள் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார். இயக்குநரின் திடீர் மறைவு திரையுலகில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


பரசுராம், சகுனி போன்ற திரைப்படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குநர் ஷங்கர் தயாள். நீண்ட காலங்களுக்கு பிறகு "குழந்தைகளை முன்னேற்றக் கழகம்" என்ற திரைப்படத்தினை எடுத்தார். இதன் டீசர் கூட சமீபத்தில் வெளியானது.  இந்நிலையில் இத் திரைப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ளத் தயாராகி வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னரே அவரது மரணம் நிகழ்ந்தது.


ஆரம்ப தகவல்களின்படி இதயம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் திடீர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையிலே அவர் காலமானார் என்ற செய்தி வெளியானது. இயக்குநரின் திடீர் மறைவு குறித்து அறிந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.  

Advertisement

Advertisement