• Dec 26 2024

அனல் பறக்கும் த்ரிஷா விவகாரம்.. மொத்த பழியையும் சுமக்கும் மணிரத்தினம்! சற்றுமுன் பரபரப்பு தகவல்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் த்ரிஷா, தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கிய விடயம் தான் பேசுப் பொருளாக உள்ளது.

மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா, கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து, சூப்பராக கம்பை கொடுத்த த்ரிஷா, தற்போது தமிழில் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என ரவுண்டு கட்டி நடித்து வருகிறார்.

தற்போது கமல் - மணிரத்தினம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தில் தான் கமிட்டாகி உள்ளதோடு, கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் அவர் பதிவிட்ட இன்ஸ்டா  ஸ்டோரி வைரலாகியது.


இப்படி ஒரு முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா மீது,  அரசியல் பிரமுகர் ஒருவர் அவதூறாக பேச அது இணையத்தில் பற்றிக் கொண்டு எரிந்தது. 

இதை தொடர்ந்து த்ரிஷா தரப்பில் இருந்து கண்டனம் எழுந்தது. அதோடு ஒரு வக்கீல் நோட்டீஸையும் அனுப்பி, ஒரு கோடி இழப்பீடு கேட்டும், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 

இதற்கிடையில் ஏன் த்ரிஷா 24 மணி நேரத்திற்கு பிறகு ரியாக்ட் செய்தார் என்றும் ஆரம்பத்திலேயே கண்டனத்தை தெரிவித்திருந்தால் அது சம்பந்தமான வீடியோ சேனலில் இருந்து அந்த அரசியல் பிரமுகர் பேசிய வீடியோவை கட் செய்திருக்கலாமே என்றும் சில தரப்பினர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் அதற்கு காரணமே மணிரத்தினம் தானாம். ஏனெனில் இந்த விஷயம் வெளியாகும் நேரத்தில் தக் லைஃப் சூட்டிங்கிற்காக த்ரிஷா செர்பியாவில் இருந்தாராம். 

அந்த படப்பிடிப்பில் மணி ரத்தினம் போட்ட கண்டீசன் ஒரு முறை செட்டிற்குள் வந்தால் யாரும் மொபைல் பயன்படுத்தக் கூடாது என்பதுதானாம். இதனால்தான் இந்த விவகாரம் த்ரிஷாவுக்கு தாமதமாக தெரிந்திருக்கிறது என கூறப்படுகிறது.

Advertisement

Advertisement