• Dec 26 2024

செந்தில சொட்டனு சொல்லி ரொம்ப அசிங்கப்படுத்துவாங்க.. பாக்கியராஜ் வேதனை

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80, 90 ஆம் ஆண்டு கால பகுதிகளில் கவுண்டமணி செந்தில் காமெடிகளுக்கு மிகப் பெரிய மார்க்கெட் காணப்பட்டது. இவர்கள் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைப்பதில் கிங்காக காணப்பட்டார்கள்.

நடிகர் செந்திலுக்கு முனுசாமி என்ற இயற்பெயர் உள்ளது. இவர் காமெடி கிங்காக காணப்படுகின்றார். இவருடைய அப்பா தன்னை அவமதித்த காரணத்தினால் 12 ஆம் வயதிலேயே ஊரை விட்டு ஓடி வந்துள்ளார். முதலில் எண்ணெய் ஆட்டும் நிலையத்திலும் அதன் பிறகு மதுபான கடையிலும் பணிபுரிந்துள்ளார். பிறகு சினிமா துறையில் இணைந்து தனது நடிப்புத் திறமை வளர்த்துக் கொண்டவர், ஆரம்பத்தில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

1983 ஆம் ஆண்டு மலையூர் மம்பட்டியான் என்ற படத்தின் மூலம் திரைத்துறையினரை கவர்ந்தார். அதன் பின்பு திருமணம் செய்து கொண்டவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதுவரை ஏறத்தாழ 260 படங்களுக்கு மேல் நடத்து உள்ளாராம்.


கவுண்டமணி-செந்தில் இருவரும் இணைந்து நடிக்காவிட்டாலும் 1000 வருடங்கள் கடந்தாலும் இவர்களது காமெடிகள் மக்களிடம் நிலைத்து நிற்கும். அந்த அளவிற்கு இன்றளவில் மட்டும் இவர்களுடைய காமெடி பிரபலமாக காணப்படுகிறது.

இந்த நிலையில், நடிகரும் இயக்குனரும் ஆன பாக்கியராஜ் அளித்த பேட்டி ஒன்றில், செந்தில் நாடக நடிகராக இருந்தபோது அங்கு இருந்தவர்கள் செந்திலை ரொம்பவே கேவலப்படுத்துவாங்க. சொட்ட இங்க வா டீ வாங்கிட்டு வாடா அது இதுன்னு திறமை இருந்தும் அவமானப்படுற செந்தில் பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கும்.

அப்போ முடிவு பண்ணினேன் நாம இயக்குனரா மாறினா  இவருக்கு பட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று. அப்படித்தான் தூரல் நின்னு போச்சு, மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா போன்ற படத்துல அவருக்கு வாய்ப்பு கொடுத்தேன். எனக்கும் மனநிறைவு ஆச்சு என்று பாக்யராஜ் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement