• Dec 25 2024

விஜய் டிவியில் அதிக சம்பளம் வாங்கும் சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலங்கள்! லிஸ்ட் இதோ

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நாளாந்தம் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் முதல் இடத்தில் காணப்படுகிறது.

சிறகடிக்க ஆசை சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிப்பவர்கள் தான் முத்து மீனா. ஆனால் இந்த சீரியலில் ஒவ்வொரு கேரக்டரும் முக்கியமாகவே காணப்படுகின்றன. அதிலும் ரோகினி மனோஜ் கேரக்டர்கள் தில்லுமுல்லு செய்யும் கதாபாத்திரங்களாக இருந்த போதும் அவர்களால் தான் சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது.

தற்போது பொய்க்கு மேல் பொய் சொல்லி மும்பையில் இருந்து வந்த பிசினஸ் மேனை மனோஜ் மடக்கியுள்ளார்.. அவரும் மனோஜின் போய் நம்பி கோடீஸ்வர குடும்பம் என்று அவர்களுக்கு தனது கம்பெனி டீலை கொடுக்கின்றார்.

இந்த நிலையில் தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் முத்து மீனா கேரக்டர்களின் சம்பள விவரங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி முத்து கேரக்டரில் நடிக்கும் வெற்றி வசந்த் மற்றும் மீனா கேரக்டரில் நடிக்கும் கோமதி பிரியா ஆகிய இருவருக்கும் ஒரு எபிசோடுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றது.


இதை தொடர்ந்து முத்துவின் தாயார் அனிலா, தந்தை சுந்தர்ராஜன் ஆகியவருக்கு 8000 ரூபாவும், மனோஜ் ரோகிணி கேரக்டரில் நடித்தவர்களுக்கு 6000 ரூபாயும், ரவி ஸ்ருதி கேரக்டரில்  நடிப்பவர்களுக்கு 5000 ரூபாயும் வழங்கப்படுகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலேயே சிறகடிக்க சீரியல் நடிகர்களுக்கு தான் அதிக சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.








 

Advertisement

Advertisement