• Jul 21 2026

இஸ்லாமியர்களை வில்லன்களாக காட்டியது தமிழ் சினிமாவா?.. அமீரின் பேச்சால் வெடித்த சர்ச்சை!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சமூக அரசியல் கருத்துக்களை துணிச்சலாக பதிவு செய்து வரும் இயக்குநர்களில் முக்கியமானவர் அமீர். தற்போது அவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் பரவலாக விவாதிக்கப்படுகிறது. அதன்போது, “90-களுக்கு பிறகு இந்திய அரசியலிலும் தமிழ் சினிமாவிலும் இஸ்லாமியர்கள் பெரும்பாலும் தீவிரவாதிகளாகவோ அல்லது வில்லன்களாகவோ மட்டுமே சித்தரிக்கப்பட்டார்கள். அந்த பார்வையை உடைக்கும் படமாக ‘ஹபீபி’ இருக்கும்” என்று அவர் தெரிவித்தார்.


‘ஹபீபி’ திரைப்படம் நெல்லை பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் நெசவாளர் சமூகத்தின் எதார்த்தமான வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ளதாக கூறிய அமீர், “இது ஒரு சமூகத்தின் உணர்வுகளையும் வாழ்வியலையும் பேசும் படம். நீண்ட காலமாக சொல்லப்படாமல் இருந்த கதையை இந்த திரைப்படம் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது.” என்றார்.

மேலும் சினிமா துறையில் தனது ஆரம்ப கால அனுபவத்தையும் பகிர்ந்த அவர், “சினிமாவுக்கு வந்தபோது என் பெயரான ‘அமீர்’ என்பதை மாற்றிக்கொள்ள சில பத்திரிகையாளர்கள் அறிவுறுத்தினர். அந்த பெயர் சிலருக்கு பிரச்சனையாக இருக்கும் என கூறப்பட்டது. ஆனால் என் அடையாளத்தை மாற்ற நான் ஒருபோதும் தயாராக இல்லை.” என்று வெளிப்படையாக பேசினார்.

இந்த கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ஆதரவும் எதிர்ப்பும் கலந்த விவாதங்களை கிளப்பி வருகின்றன.


Advertisement

Advertisement