• Sep 17 2026

சூரியின் மண்டாடி வசூல் இவ்வளவா.? மகிழ்ச்சியின் உச்சியில் துள்ளிக் குதிக்கும் படக்குழு.!

shali / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் சூரி. ஆரம்ப காலத்தில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், ‘குள்ளநரி கூட்டம்’ திரைப்படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். 

அந்தக் காட்சி அவருக்கு மிகப்பெரிய அடையாளமாக மாறியதுடன், தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் குவிந்தன.

இதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை’ திரைப்படத்தின் மூலம் சூரி கதாநாயகனாக புதிய அவதாரம் எடுத்தார். இப்படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றது. தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் சூரிக்கு ‘மாமன்’ திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், சூரி நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இப்படம் பாய்மரப் படகு போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. சூரியுடன் சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார், மிதுன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் மட்டுமின்றி மொத்தம் 5 மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது.

வெளியான முதல் நாளிலிருந்தே படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தற்போது ஒரு வாரத்தை நிறைவு செய்துள்ளது. இதுவரை இப்படம் ரூ.45 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதன் மூலம் சூரியின் ‘மண்டாடி’ திரைப்படம் வெற்றிப்படங்களின் பட்டியலில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து வசூல் அதிகரித்து வருவதால், படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

Advertisement

Advertisement