• Dec 27 2024

நெருக்கடி மேல் நெருக்கடி.. பதவிக்காலம் முடியும் முன்பே ராஜினாமா செய்யும் மோகன்லால்?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமாக காணப்படுபவர் தான் நடிகர் மோகன்லால். இவர் கிட்டத்தட்ட 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சிறைச்சாலை, அரண், ஜில்லா, இருவர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். இறுதியாக அவர் நடிப்பில்  மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் வெளியானது.

தென்னிந்திய சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக்கி வளர்ச்சி கண்டுவரும் திரையுலகமாக மலையாள சினிமா காணப்படுகிறது. இந்த திரையுலகில் உள்ள பிரபலங்களுக்கான அமைப்பாக ''அம்மா'' உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலங்களுக்கு எப்படி தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளதோ அதேபோல கேரளா பிரபலங்களுக்கு அம்மா உள்ளது.


இந்த சங்கத்துக்கான தேர்தல் கடத்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் தலைவராக மோகன்லால் தெரிவு செய்யப்பட,  செயலாளராக எடவேல பாபு போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டார்கள். இதில் மோகன்லால் எடுக்கப்பட்ட சில தீர்மானங்கள் மலையாளத் திரையுலகில் அதிருப்தியை  ஏற்படுத்தியது. இதன் எதிரொலியால் அவர் நடிகர் சங்க பொறுப்பில் தொடர விரும்பாமல் பதவிக்கால முடியும் முன்பு ராஜினாமா செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்காக தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது மோகன்லால் ராஜினாமா செய்ய உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement