• Dec 26 2024

சைந்தவியை எனக்கு ஸ்கூல் படிக்கும்போதே தெரியும்.. டி இமானின் எமோஷனல் வீடியோ..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

பாடகி சைந்தவியை எனக்கு ஸ்கூல் படிக்கும் போது தெரியும் என டி இமான் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோவில் முதலில் சைந்தவி பேசியபோது ரொம்ப வருஷம் கழித்து இமான் அவர்களுடன் பணி செய்கிறேன், ’பேபி அண்ட் பேபி’ என்ற படத்திற்காக ஒரு பாடலை நான் பாடுகிறேன் என்று கூறினார்.

இமான் அவர்களுடன் சேர்ந்து நான் நான்காவது பாடலில் பணிபுரிகிறேன். முதன் முதலில் 2005 ஆம் ஆண்டு ’ஏபிசிடி’ என்ற படத்தில் சினேகா அவர்களுக்காக ’மஞ்சள் முகமே’ என்ற பாட்டை நான் பாடினேன். அப்போது நான் ஸ்கூல் படித்துக் கொண்டிருந்தேன்.

யுகபாரதி அவர்கள் இந்த பாட்டை எழுதி இருக்கிறார், மிகவும் என்ஜாய் பண்ணி இந்த பாடலை நான் பாடினேன், டி இமான் அவர்கள் மிகவும் அழகாக இந்த பாடலை எனக்கு வாசித்து, பாடி, சொல்லிக் கொடுத்தார். இந்த பாடல் மிகவும் நன்றாக வந்துள்ளது, இந்த பாடலை எல்லோரும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்’ என்று சைந்தவி கூறியுள்ளார்.

இதையடுத்து இந்த வீடியோவில் இமான் கூறியபோது, ‘சைந்தவியை எனக்கு ரொம்ப வருஷமா தெரியும், குழந்தையாக இருக்கும் போது அந்த பொண்ணு என் இசையில் பாடியுள்ளார். இப்போது ’பேபி அண்ட் பேபி’ படத்தில் சைந்தவி பாடிய பாட்டு, ஒரு தாய் பாடும் தாலாட்டு பாடலாக அமைந்துள்ளது. சைந்தவி குரல் நிச்சயம் தாய்மையை உணரும் வகையில் இருக்கும் என்று நான் நம்புகிறேன்’ என்று தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.



Advertisement

Advertisement