• Jun 26 2025

தனுஷ் -அஜித் சந்திப்பு விரைவில்..! கூட்டணி சேர்வது உறுதி..தயாரிப்பாளர் யார் ?

Mathumitha / 6 hours ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் தற்போது ஹீரோ என்பதை தாண்டி இயக்குநராக முன்னேறி வருகின்றார். பவர்பாண்டி ,ராயன் ,நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ,இட்லி கடை இதனை தொடர்ந்து தனுஷ் நடிகர் அஜித்தை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது ஆனாலும் அஜித் குட் பேட் அக்லியை தொடர்ந்து ஆதிக் உடன் இணைய இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.


இந்த நிலையில் இந்த படத்திற்கு அடுத்ததாக நிச்சயம் தனுஷ் இயக்கத்தில் நடிப்பார் என தெரியவந்துள்ளது. மேலும் தனுஷ் ஒரு லைன் மாத்திரம் அஜித்திற்கு சொல்லி இருப்பதாகவும் முழு கதையும் இன்னும் சொல்லவில்லை விரைவில் முழு கதையும் சொல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


அதுவும் அஜித் தரப்பில் இருந்து தனுஷிற்கு துபாய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் அஜித்தின் விருப்பப்படி தயாரிப்பாளரை தனுஷ் தீர்மானிக்க இருக்கின்றார். விரைவில் இந்த கூட்டணி இணையும் என எதிர்பார்க்கப்டுகின்றது.

Advertisement

Advertisement