• Dec 26 2024

தனுஷ் செய்த தரமான செயல்.. ரெட் கார்டு போட்ட தயாரிப்பாளர் சங்கம் அதிர்ச்சி..! இப்ப என்ன செய்வீங்க..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

தயாரிப்பாளர் சங்கம் நேற்று திடீரென நடிகர் தனுஷ்-க்கு ரெட் கார்டு போட்டு அறிவிப்பு வெளியிட்ட நிலையில் ஒரு சில மணி நேரங்களில் தனுஷ் செய்த தரமான செயல் காரணமாக தயாரிப்பாளர் சங்கம் அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் விஷாலுக்கு ரெட் கார்டு போன்ற தயாரிப்பாளர் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தனுஷூக்கும் ரெட்  கார்டு   போட்டது என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தனுஷை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்தில் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று நேற்று வெளியான அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தனுஷ் அதிரடியாக அமைச்சர் உதயநிதியின் நெருக்கமான நண்பர் ஒருவருக்கு தனது அடுத்த படத்திற்கான கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் உதயநிதியின் நண்பருக்கு தனுஷ் கால்ஷீட் கொடுத்துள்ளதால் தயாரிப்பாளர் சங்கம் அதிர்ச்சி அடைந்திருப்பதாக தெரிகிறது.

வேறொரு தயாரிப்பாளராக இருந்தால் தயாரிப்பாளர் சங்கம் அந்த தயாரிப்பாளரிடம் சென்று தனுஷை வைத்து படம் எடுக்க வேண்டாம் என்று சொல்வதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் அமைச்சர் உதயநிதிக்கு நெருக்கமான நண்பரிடம் தயாரிப்பாளர் சங்கம் இந்த வார்த்தையை சொல்லுமா? தனுஷை வைத்து படம் எடுக்க வேண்டாம் என்று கூறுவார்களா? தனுஷ் அடுத்த படத்திற்கு முட்டுக்கட்டை போடுவார்களா? என்பதெல்லாம் கேள்விக்குறி என்று திரை உலகினர் கூறி வருகின்றனர்.

தன் மீது ரெட் கார்டு போட்ட சில மணி நேரங்களில் தனுஷ் செய்த தரமான செயலால் தயாரிப்பாளர் சங்கம் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisement

Advertisement