• Dec 27 2024

’D51’ படத்திற்காக தனுஷ் பரிந்துரை செய்த மூன்று டைட்டில்கள்.. மூன்றையும் ரிஜக்ட் செய்த சேகர் கம்முல்லா..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்குகுபேராஎன்ற டைட்டில் வைக்கப்பட்டது என்பதும் இந்த டைட்டில் போஸ்டர் நேற்று வெளியானது என்பதையும் பார்த்தோம்.

இந்த படத்தின் டைட்டில் என்ன வைக்கலாம் என்று தனுஷ் மற்றும் சேகர் கம்முலா ஆலோசனை செய்த போது மூன்று டைட்டில்களை தனுஷ் பரிந்துரை செய்ததாகவும் ஆனால் அந்த மூன்றையும் இயக்குனர் சேகர் கம்முலா ரிஜெக்ட் செய்து விட்டு 'குபேராஎன்ற டைட்டிலை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனுஷ் பரிந்துரை செய்த அந்த மூன்று டைட்டில்தாராவி’ ’காளிமற்றும்ஆளவந்தான்’. இந்த மூன்று டைட்டில் களை கேட்ட சேகர் கம்முலாதாராவிடைட்டில் ஓகே என்று சொல்லி, அந்த டைட்டிலை அவர் தேர்வு செய்ய இருந்ததாக கூறப்பட்டது. மேலும் இந்த டைட்டில் குறித்த போஸ்டரும் தயார் டிசைனரிடம் கூறிய நிலையில் தான் திடீரென அவருக்குகுபேராஎன்ற டைட்டில் தோன்றியதாகவும் இதனை அடுத்து போஸ்டரை மாற்ற சொல்லிகுபேராடைட்டிலை வைக்க முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.



தான் பரிந்துரை செய்த மூன்று டைட்டில்களையும் இயக்குனர் ரிஜெக்ட் செய்ததில் தனுஷ்-க்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் இந்த கதைக்குகுபேராஎன்ற டைட்டில் தான் சரியானது என்றும் இயக்குனரின் முடிவுக்கு தனுஷ் ஆதரவு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் ரசிகர்கள் இந்த செய்தி வெளியானவுடன்தாராவிஎன்ற டைட்டில் இந்த படத்திற்கு நன்றாக இருந்திருக்கும் என்றும் இது மும்பையில் உள்ள தமிழ் மக்களின் கதை அம்சம் கொண்ட படம் என்பதால் அந்த டைட்டில் பொருத்தமாக இருந்திருக்கும் என்று கூறி வருகின்றனர். இருப்பினும் சேகர் கம்முலா ஏதோ ஒரு காரணத்துக்காக தான்குபேராஎன்ற டைட்டிலை வைத்திருப்பதாக ரசிகர்கள் ஆறுதல் அடைந்து வருகின்றனர். மொத்தத்தில் நேற்று வெளியான டைட்டில் பெரும் ஆலோசனைக்குப் பிறகு வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement