• Dec 26 2024

I am Lost என்ற நயன்தாரா போஸ்ட்டுக்கு இதுதான் காரணமா? ஆறுதல் கூறிய விக்னேஷ் சிவன்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் I Am Lost என்று பதிவு செய்திருந்ததை அடுத்து மீண்டும் வழக்கம் போல் நயன்தாரா தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டதாகவும் அதனால் விவாகரத்து செய்யப் போவதாகவும் வதந்திகள் கிளம்பியது.

ஆனால் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் நயன்தாரா துபாய் செல்லும் புகைப்படத்தை பதிவு செய்துநாங்கள் மகிழ்ச்சியாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்என்பதை மறைமுகமாக பதிவு செய்திருந்தார்.

அப்படியானால் அவர் Iam Lost என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ய என்ன காரணம்? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் நயன்தாராவுக்கு ஒரு விருது கிடைக்க இருந்ததாகவும் அந்த விருது அவருக்கு தான் என்று கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிவு செய்யப்பட்டு இருந்ததாகவும் ஆனால் கடைசி நேரத்தில் அந்த விருது வேறொரு நடிகைக்கு சென்று விட்டதாகவும் இதனை மறைமுகமாக குறிப்பிடும் வகையில் தான் நயன்தாரா, Iam Lost  என்று பதிவு செய்திருந்தார் என்றும் கூறியுள்ளார்.



ஏற்கனவேஜவான்படத்திற்காக விருது பெற்ற நயன்தாரா இந்த விருதும் கிடைத்தால் தான் இழந்த லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தையும், மார்க்கெட்டையும் மீட்டு இருக்கலாம் என்று ஆசையில் இருந்ததாகவும், ஆனால் கடைசி நேரத்தில் அந்த விருது வேறொருவருக்கு மாறி போனதில் அவர் மிகவும் வருத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து விக்னேஷ் சிவன் தான் நயன்தாராவுக்கு ஆறுதல் கூறிகண்டிப்பாக உனக்கு தேசிய விருது விரைவில் கிடைக்கும் என்று தேற்றியதாகவும் அதன் பிறகு நயன்தாராவை குஷிப்படுத்துவதற்காக தான் அவர் தற்போது துபாய் அழைத்துச் சென்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் பிரிய வாய்ப்பே இல்லை என்றும் ஏனெனில் சுமார் 100 கோடிக்கு மேல் இருவரும் இணைந்து தான் சொத்து வாங்கி இருப்பதாகவும் இருவரும் பிரிய நேரிட்டால் அந்த சொத்தை பிரிப்பது மிகவும் கடினமான செயல் என்றும், அது மட்டும் இன்றி இருவரும் ஒருவரை ஒருவர் அன்புடன் காதலுடன் இருப்பதால் பொருளாதார ரீதியிலும் சரி, மனதளவையும் சரி பிரிய மாட்டார்கள் என்றும் அந்த பத்திரிகையாளர் கூறியுள்ளார்.



Advertisement

Advertisement