• Dec 26 2024

அப்பா, அம்மாவை சேர்த்து வைக்க தனுஷ் மகன் எடுத்த கடைசி முயற்சி.. இதுதான் பிரிவுக்கு காரணமா?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிவதாக முடிவு எடுத்து அந்த முடிவை தங்களது சமூக வலைதளத்திலும் அறிவித்த நிலையில் சட்டப்படி விவாகரத்து வாங்காமல் இருந்தனர். இதனை அடுத்து ரஜினி மற்றும் கஸ்தூரிராஜா குடும்பத்தினர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் சேர்த்து வைப்பார்கள் என்றும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் தங்களது கடந்த கால மனக்கசப்புகளை மறந்து மீண்டும் ஒன்று சேர்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் நேரடி பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்றும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்து பேசக்கூட விரும்பவில்லை என்று கூறிவிட்டதால் இரு வீட்டினர்களும் சேர்த்து வைக்கும் முயற்சியை கைவிட்டனர். இருப்பினும் இருவருமே விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்யாமல் இருந்ததை எடுத்து அவர்கள் மனது ஒரு நாள் மாறும் என்று நம்பிக்கை உடன் காத்திருந்தனர். 

இந்த நிலையில் தான் அப்பா அம்மாவை சேர்த்து வைக்க தனுஷின் மூத்த மகன் முயற்சி செய்ததாகவும் அந்த முயற்சி கொஞ்சம் கூட பலிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. உங்கள் இருவர் வாழ்க்கைக்காக இல்லை என்றாலும் எங்களுக்காகவாது நீங்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்று தனுஷின் மகன் எடுத்த கடைசி முயற்சி தோல்வி அடைந்த நிலையில் இப்படியே போனால் இதற்கு ஒரு முடிவே இருக்காது என்று ஆலோசனை செய்து தான் இருவரும் தற்போது விவாகரத்து மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

விவாகரத்து பெற்றுவிட்டால் இனிமேல் தங்களை சேர்த்து வைக்க யாரும் முயற்சி செய்ய மாட்டார்கள் என்பதற்காகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இருவருமே ஒரு புதிய வாழ்க்கையை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement