• Dec 26 2024

எங்க அம்மாதான் எனக்கு மகளா பிறந்துருக்காங்க.. ஸ்ரீதேவி விஜயகுமார் நெகிழ்ச்சி..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

எங்க அம்மா தான் எனக்கு மகளாக பிறந்திருக்கிறார்கள் என்று சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்த ஸ்ரீதேவி விஜயகுமார் நெகிழ்ச்சியுடன் கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிரபல குணச்சித்திர நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா தம்பதிகள் மகள்களில் ஒருவர் தான் ஸ்ரீதேவி விஜயகுமார் என்பதும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு சில படங்களில் நாயகியாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீதேவி கடந்த 2009 ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ராகுல் - ஸ்ரீதேவி தம்பதிக்கு ரூபிகா என்ற மகள் பிறந்த நிலையில் தன்னுடைய மகள் தன்னுடைய அம்மாவைப் போலவே இருப்பதாகவும் என் அம்மாவே எனக்கு மகளாக வந்து பிறந்து விட்டதாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.



தற்போது எனக்கு ஒரு நல்ல குடும்பம், நல்ல சகோதரி, நல்ல அப்பா, நல்ல மகள் இருக்கிறார்கள், என்னுடைய வீடு தான் எனக்கு உலகம் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். என் மகள் கோபிகா பேசுவது நடப்பது எல்லாமே என் அம்மா மாதிரியே இருக்கிறது என்றும் என் அம்மா தான் எனக்கு மகளாக வந்து பறந்து விட்டார் என்று நினைக்கிறேன் என்றும் அடிக்கடி என் அம்மா நான் திரும்ப வருவேன் என்று என் கனவில் சொல்லிக் கொண்டே இருப்பார் அது போலவே நடந்து விட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் சிறுவயதிலே என் அம்மாவை மிகவும் மிஸ் பண்ணினேன், என் அம்மா சாகும்போது எனக்கு வெறும் 15 வயது தான், ஆனால் எனக்கு என் அம்மாவின் ஞாபகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக என் அப்பா மிகுந்த அக்கறையுடன் என்னை பார்த்துக் கொண்டார், எனது சகோதரி பிரீத்தா என்னை ஒரு அம்மா போலவே பார்த்துக் கொண்டார் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement