• May 08 2025

கஷ்டத்தில கைகொடுத்து உதவியது தனுஷ் மட்டும் தான்...! பிரபல காமெடியன் ஓபன்டாக்..!

subiththira / 7 hours ago

Advertisement

Listen News!

விஜய் டீவியின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் தான் ரோபோ ஷங்கர். நகைச்சுவை நிகழ்ச்சிகளின் மூலம் கோடிக்கணக்கான பார்வையாளர்களின் மனதில் தனித்துவமாக இடம் பிடித்த இவர், இதனை அடுத்து திரையுலகிற்கு இடம்பெயர்ந்து வெற்றி நடைபோடுகிறார்.

அவரின் அசத்தலான நகைச்சுவை உணர்வு, அற்புதமான டைமிங் சென்ஸ் என்பன அவரை ஒரு தனி உயரத்திற்கே கொண்டு சென்றுவிட்டது. இன்று, சின்னத்திரை நடிகராக இருந்து தற்பொழுது  வெள்ளித்திரையின் முக்கியமான குணச்சித்திர நடிகராக திகழ்ந்து வருகின்றார்.


இந்நிலையில், சமீபத்திய ஒரு நேர்காணலில் நடிகர் தனுஷ் குறித்து ரோபோ ஷங்கர் பகிர்ந்த சில உண்மைகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பேட்டியின் போது அவர் கூறியதாவது, "நான் வாழ்க்கையில் ஒரே ஒரு ஆளுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். அவர் தான் நடிகர் தனுஷ். நான் ஒரு கட்டத்தில் மிகவும் மோசமான மனநிலையிலும், பொருளாதார சிக்கலிலும் சிக்கிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு தனுஷ் தான் பணரீதியாக உதவி செய்திருந்தார்." எனக் கூறினார். 


திரையுலகில், சில நடிகர்கள் வெற்றிக்குப் பிறகு தங்களின் பழைய உறவுகளை மறந்துவிடுகிறார்கள். ஆனால் தனுஷ், எதிர்பார்ப்பு இல்லாமல் ஒரு சக நடிகருக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார் என்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement