• Apr 07 2026

‘துரந்தர் 2’ தீவிரமான வசூல் வேட்டை.. ஒரு நாளில் மட்டும் இத்தனை கோடியா.?மொத்த கலெக்சன் இதோ

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி சக்கைப் போடு போடும் படம் தான் துரந்தர் 2. இயக்குநர் ஆதித்ய தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த மார்ச் 19ஆம் தேதி இந்த படம் வெளியானது.

ஏற்கனவே வெற்றி பெற்ற “துரந்தர்” படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த இந்த படம், திரையரங்குகளில் ரசிகர்களின் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

படம் வெளியாவதற்கு முன் மார்ச் 18ஆம் தேதி நடைபெற்ற பிரீமியர் காட்சிக்கும் திரைத்துறையினரிடமிருந்து நேர்மறை விமர்சனங்கள் கிடைத்தன. இந்தியா–பாகிஸ்தான் பின்னணியில் அமைந்துள்ள இந்த படம், உண்மை சம்பவங்களும் கற்பனையும் கலந்த கதையம்சத்தால் கவனம் ஈர்த்துள்ளது.


மேலும், இந்த படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ.241 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இந்தியாவில் மட்டும் ரூ.145 கோடி கிடைத்துள்ளது. இரண்டாம் நாள் ரூ.82.35 கோடி, மூன்றாம் நாள் ரூ.83.53 கோடி வசூலாகி, இந்திய வசூல் ரூ.300 கோடியை கடந்துள்ளது.

இந்த நிலையில், துரந்தர் 2 திரைப்படம் நேற்று மட்டும் ஒரு நாளில் ரூ.126 கோடியை  வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்தத்தில், இந்த படம் உலகளவில் ரூ.500 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement