விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் ஆரம்பத்தில், பார்ப்பவர்களை சலிப்படையச் செய்ததாக கூறப்பட்டது. அதற்கு காரணம், அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் போதுமான ‘கன்டென்ட்’ வழங்காமல் இருந்ததே என தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த சீசனின் ஆரம்பத்தில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் பலர் சமூக வலைத்தளங்களில் வைரலான பிரபலங்களாக இருந்தனர். அதிலும் குறிப்பாக வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், அகோரி கலையரசன் மற்றும் ‘பலூன் அக்கா’ என அழைக்கப்படும் அரோரா ஆகியோர் கலந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் கலந்து கொண்ட கானா பாடகர் வினோத் கவனம் ஈர்த்தார். இவர் தமிழ் திரைப்படங்களில் பல பாடல்கள் பாடியிருந்தாலும், அவை பிரபலமான போதிலும் அதை வினோத் தான் பாடினார் என்பது பலருக்கு தெரியாமல் இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னரே, அந்த பாடல்களை அவர் பாடியிருந்தது மக்களுக்கு தெரியவந்தது.
இந்த சீசனில் கானா வினோத் டைட்டில் வின்னராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாக அவர் 18 லட்சம் ரூபாய் பணப்பெட்டியுடன் வெளியேறினார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த கானா வினோத்திற்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. “இந்த வெற்றியே எனக்கு போதும்” என்று அவர் மற்றும் அவரது மனைவி உணர்ச்சிவசப்பட தெரிவித்தனர்.
இந்த நிலையில், கானா வினோத் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறுகையில், விஜய் சாரே கூப்பிட்டு அவர் கட்சிக்கு ஒரு அரசியல் பாட்டு பாடச் சொன்னால் நான் பாட மாட்டேன். நான் பொதுவான ஒரு ஆள், அவர் கட்சிக்காக நான் பாடினா அது தனிப்பட்ட விஷயமா ஆகிடும். இதுவே நான் அவர் படத்துல கூப்பிட்டு பாடச் சொன்னா நான் பாடுவேன். ஆனால் கட்சிக்காக பாட மாட்டேன்.. என்று தெரிவித்துள்ளார்.
Listen News!