• Jun 11 2026

பாரதிராஜாவின் சாவு வீட்டில் பழி தீர்த்தாரா கங்கை அமரன்.? பயில்வான் பேச்சால் சர்ச்சை

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மண்வாசனையை உலகம் முழுவதும் கொண்டு சென்ற இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மறைவு திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்த நிலையில், அவரது மறைவு குறித்து பலரும் தங்களது நினைவுகளையும், உணர்வுகளையும் பகிர்ந்து வரும் நிலையில், மூத்த நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் அளித்துள்ள பேட்டி தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளது.

பாரதிராஜா குறித்து பேசிய பயில்வான், 84 வயசு வரைக்கும் நல்ல வாழ்க்கை வாழ்ந்துட்டு போயிருக்கார். ஆனா, உள்ளுக்குள் ஒரு சோகம் இருந்தது. எல்லாரும் தன்னோட பையன் தனக்கு கொள்ளி வைக்கணும்னு நினைப்பாங்க. ஆனா, அவர் தன்னோட மகன் மனோஜுக்கு தகப்பனாக இருந்து இறுதி சடங்கு செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தது. அந்த புத்திர சோகம் அவரை ரொம்பவே பாதிச்சிருக்கும் என்று உருக்கமாக கூறினார்.

மேலும், பாரதிராஜாவின் மனைவி சந்திரலீலா அவர்களோட நீண்ட காலமாக சேர்ந்து வாழல. அதுக்கான காரணம் பாரதிராஜாதான். அது சினிமா வட்டாரத்தில் பலருக்கும் தெரிந்த விஷயம்.


பாரதிராஜாவின் இறுதி சடங்கின்போது அவரது மனைவி கதறி அழுததையும், அதன்போது கங்கை அமரன் பேசியதாக வெளியான தகவல்களையும் குறிப்பிட்ட பயில்வான், கடுமையாக விமர்சித்தார்.

அதன்படி, பாரதிராஜா தலைமாட்டுல நின்னு கத்துறதுக்கு உனக்கு என்ன உரிமை? சொந்தக்காரனா? பங்காளியா? பொண்ணு கொடுத்துருக்கியா? அதே உறவு இளையராஜாவுக்கும் இருந்துச்சு. அவர் அமைதியா இரங்கல் சொன்னாரு. அதுதான் மரியாதை  என்று ஆவேசமாக பேசினார்.

அதே நேரத்தில், இறந்த பிறகு மனைவி வந்து அழுவது குறித்து, அது அவர்களோட குடும்ப மரபா இருக்கலாம். தாலி கட்டிய புருஷன் முகத்தை கடைசியாக பார்த்துட்டு போகணும்னு வந்திருக்கலாம். அதை நாம தீர்ப்பு சொல்ல முடியாது என்றும் குறிப்பிட்டார்.

பாரதிராஜாவின் கலைப் பயணத்தை நினைவுகூர்ந்த பயில்வான், தமிழ் சினிமா வரலாறு எழுதினா முதல் மூணு பக்கத்துல கண்டிப்பா பாரதிராஜா இருப்பார். ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, கார்த்திக், நெப்போலியன், பாண்டியன் என எத்தனையோ நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியவர். கிராமத்து மண்வாசனையை கேமரா மூலம் உலகத்துக்கு காட்டியவர் என்று புகழாரம் சூட்டினார்.

மேலும், பணம், புகழ், செல்வாக்கு எல்லாம் இருந்தாலும் கடைசி காலத்துல தனிமை ஒரு பெரிய வேதனை. அதைத்தான் அவர் அனுபவிச்சாரு என்றும் கூறினார்.

பாரதிராஜாவின் மறைவுக்கு தமிழக அரசு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என அறிவித்துள்ளது. மேலும், அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

பயில்வானின் இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், அவரது கருத்துகள் குறித்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களும் விவாதங்களும் எழுந்துள்ளன.

Advertisement

Advertisement