இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய 'கருப்பு' படத்தில் சூர்யா, திரிஷா கிருஷ்ணன், ஆர்.ஜே. பாலாஜி, நட்டி நடராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்த படம் வெளியான முதல் ஆறு நாட்களில் உலகளவில் ரூ.207 கோடி வசூலித்துள்ளது.
இந்த படத்தில் இந்த்ரன்ஸ், கேரளாவைச் சேர்ந்த ஒருவராக நடித்து, மருத்துவ சிகிச்சைக்காக தனது மகளுடன் சென்னை வரும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் அவரது நகை திருடப்படுவதால் நீதிமன்றத்தில் நீண்ட போராட்டத்தை சந்திக்கிறார். மகளுக்காக போராடும் ஒரு அப்பாவின் உணர்ச்சி மிக்க நடிப்பு ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது. இது அவரின் முதல் தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சூர்யா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் இந்த்ரன்ஸ் உணர்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

குறித்த பேட்டியில் பேசிய இந்த்ரன்ஸ், நான் பொதுவாக வேறு மொழி படங்களில் நடிக்க சற்று பயப்படுவேன். சூர்யாவுடன் நடிக்க வேண்டும் என்றதும் மேலும் பதற்றம் ஏற்பட்டது.
என்னுடைய கதாபாத்திரம் மலையாளி என்பதால் தான் இந்த படத்தை ஏற்றுக்கொண்டேன். இல்லையெனில் நான் நடிக்க மாட்டேன் என்றும் கூறியிருந்தேன்.
சூர்யா குறித்து பேசிய அவர், “அவர் மிகவும் எளிமையானவர், அன்பானவர். அவரை அருகில் பார்த்தாலே கொஞ்சம் பதற்றமாக இருக்கும். ஆனால் அவர் என்னை மிகவும் வசதியாக உணர வைத்தார்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழி குறித்து பேசிய இந்த்ரன்ஸ், “தமிழ் மிகவும் மதிப்புமிக்க மொழி. அதை தவறாக பேச விரும்பவில்லை” என்றும் கூறியுள்ளார்.
Listen News!