பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் பான்-இந்திய திரைப்படமான “டிராகன்” குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல் தற்போது ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது. ஜூனியர் என்டிஆர் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. மேலும், ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், பிஜு மேனன் மற்றும் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் பிரசாந்த் நீல் பேசிய கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூறுகையில், “டிராகன் படத்தின் கதாபாத்திரத்திற்காக ஜூனியர் என்.டி.ஆரிடம் உடல் எடையை குறைக்க சொல்லியிருந்தேன்.
ஆனால் அவர் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், வெறும் நான்கு மாதங்களில் 15 கிலோ வரை எடையை குறைத்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தார். அந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் உழைத்தார்,” என்று தெரிவித்தார்.
மேலும், “அவர் மிகவும் மெலிந்து காணப்பட்டதால், அவரது அம்மாவும் மனைவியும் என்னை பார்த்து கோபப்பட்டார்கள். உண்மையாகவே நான் கூட அதிர்ச்சி அடைந்தேன்,” என சிரித்தபடி பகிர்ந்துள்ளார். இந்த தகவல் வெளியாகியதிலிருந்து, ஜூனியர் என்.டி.ஆரின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
Listen News!