• Apr 07 2026

படப்பிடிப்பு தளத்தில் இப்படியா? – கொச்சி போலீசின் அதிரடி வேட்டை.. கைதானார் ரஞ்சித்

shali / 6 days ago

Advertisement

Listen News!

மலையாளத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவமாக, பிரபல இயக்குநர் ரஞ்சித் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடிகை ஒருவர், படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது தன்னை தவறாக அணுகி, கேரவனுக்கு அழைத்துச் சென்று துன்புறுத்த முயன்றதாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் கொச்சி போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினார்.


விசாரணையின் ஒரு பகுதியாக, நேற்று இரவு ரஞ்சித் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்னர் அவர் கொச்சியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது மேலும் தீவிரமாக விசாரணை செய்யப்படுகிறது.

இந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். பெண்கள் பாதுகாப்பு மற்றும் பணியிட சூழல் குறித்த விவாதங்களும் மீண்டும் எழுந்துள்ளன.

Advertisement

Advertisement