பிரபல இயக்குநர் ஷங்கர் பிரம்மாண்டத்தின் உச்சமாக படங்கள் இயக்கி மக்களை வியக்கவைப்பவர். தற்போது கடைசியாக தெலுங்கில் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற அரசியல் சார்த்த கதைக்களத்தை எடுத்து வசூலில் பட்டையை கிளப்பினார். இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் தனது அடுத்த படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
இயக்குநர் ஷங்கர் அந்நியன், எந்திரன், நண்பன், ஐ, இந்தியன் 2 ஆகிய திரைப்படங்களை இயக்கி வசூல் இயக்குநராக வலம் வருகிறார். இவரின் இயக்கத்தில் கமலஹாசன் நடித்து வெளியான இந்தியன் 2 படு மோசமான விமர்சனத்தை சந்தித்தது அத்தோடு வசூலிலும் சரிந்தது. இதனை அடுத்து காட்டிய வெற்றியை நோக்கி ஓடிய சங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் திரைப்படத்தினை இயக்கி ரிலீஸ் செய்தார்.
இந்த படம் இவருக்கு மாபெரும் வெற்றியையும் நல்ல விமர்சனகலியும் கொடுத்தது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகிய இந்த திரைப்படம் இன்னும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் சமீபத்திய நேர்காணலில் பேசிய சங்கர் அடுத்ததாக" வேள்பாரி திரைப்படத்தினை இயக்க இருக்கிறார். வீரயுக நாயகன் வேள்பாரியின் படத்தை 3 பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். இதன் அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.
Listen News!