• Dec 25 2024

அவரும் அரசியல் வரலாம்... அந்த மனநிலை வந்த பிறகு தான் வர வேண்டும்... நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து இயக்குனர் வெற்றி மாறன் கருத்து...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் அவர்களின் அரசியல் பிரவேசம் குறித்து பிரபல இயக்குநர் வெற்றி மாறன் கருத்து தெரிவித்துள்ளார்.


அதாவது நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வர போவதாக ஏற்கனவே பல செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் வெளியான லியோ திரைப்படம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் திரைக்கு வந்திருந்தது. 


இந்த திரைப்படம் ரிலீசுக்கு  முன்பு பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தது. இந்த விபரமும் நாங்கள் அறிந்ததே இருப்பின்னும் அந்த பிரச்சினைகள் வருவதற்கு மூலகாரணம் விஜய் அவர்களின் அரசியல் பிரவேசம் மற்ற சார்பினருக்கு பிடிக்காததினாள் லியோ படத்திற்கு அத்தனை சிக்கல் கொடுத்துள்ளனர் என்று செய்திகள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.


இந்நிலையில் லியோ திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த பிறகு வெற்றி விழாவில் 2026 எவ்வாறு இருக்க போகிறது என நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு நடிகர் விஜய் கப்பு முக்கியம் பிகிலு என்று மறைமுகமாக அரசியல் பிரவேசம் குறித்து பேசியுள்ளார். இந்த விடையம் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.


இந்த விடையம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்மட்டுமல்ல அனைவரும் அரசியல் வருவதற்கு தகுதியுள்ளது. நடிகர் விஜய்யும் அரசியல் வரலாம் ஆனால் அதற்கு முன்னராக கள செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும். அரசியல் பல சவால்கள் நிறைந்தது. அத்தகைய சவால்களை எதிர் கொள்வதற்கு மனநிலையில் வந்த பிறகே அரசியலில் நுழைய வேண்டும் என்று இயக்குனர் கூறியுள்ளார். 


ஆகமொத்தத்தில் நடிகர் விஜயின் அரசியல் வருகை நிறையதரப்பினர் சார்பில் சாதகமாகத்தான் உள்ளது. நடிகர் விஜயின் அரசியல் வருகை எவ்வாறு அமைகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.    

Advertisement

Advertisement