• Jan 10 2025

இட்லி கடை படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் விற்பனை எத்தனை கோடி தெரியுமா.? தனுஷுக்கு எகிறும் மவுசு

Aathira / 11 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார் தனுஷ். அதன் பின்பு ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், இட்லி கடை ஆகிய படங்களுக்கும் இயக்குநராக காணப்படுகின்றார்.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்திற்கான ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. தற்போது இட்லி கடை படத்தினை இயக்கி நடித்து வருகின்றார் தனுஷ். இந்த படத்தின் ஷுட்டிங் தனுஷின் சொந்த ஊர் பகுதிகளில் நடைபெற்று வருகின்றது.

d_i_a

இந்த படத்தில் தனுசுடன், நித்யா மேனன், சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் அருண் விஜய் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றார்கள். இதன் பெரும்பாலான காட்சிகள் தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தான் நடைபெற்று வருகின்றதாம். 


இந்த படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான முக்கிய காட்சிகள் பாங்காக்கில் படமாக்கப்பட உள்ளதால் எதிர்வரும் 19ஆம் தேதி இட்லி கடை பட குழுவினர் பாங்காக் செல்ல உள்ளனர். அங்கு 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இட்லி கடை படத்தை மிகப்பெரிய விலைக்கு விற்று உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அதன்படி, தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் 7 கோடிக்கு தான் விற்கப்பட்டு உள்ளது. ராயன் 8 கோடிக்கு விற்க்கப்பட்டது.

ஆனால் தற்போது இட்லி கடை படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸ் 12 கோடி 60 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் ராயன் படம் 25 கோடிரூபா  ஓவர்சீஸ் ரைட்ஸில் கலெக்சன் பண்ணி இருக்கு. அதனால் தான் இதன் ஓவர்சீஸ் எகிறியுள்ளது.

எனவே இதன் மூலம் அடுத்த படங்களில் தனுஷின் சம்பளம் உயரும். அவர் 100 கோடியை பெற்றாலும் பெறலாம் என அந்தணன் தெரிவித்து உள்ளார்.

Advertisement

Advertisement